அமெரிக்க இராணுவத்தை திணறடிக்கும் சீனா.. ஒரே ஒரு சாட்டிலைட் தான்….

சீனாவால் அமெரிக்க இராணுவத்திற்கு புதிய தலைவலி உருவாகியுள்ளது. சீனா சமீபத்தில் விண்வெளிக்கு அனுப்பிய ஒரு சிறிய செயற்கைக்கோள் மூலம் இந்த தலைவலி உருவாகியுள்ளது.

காரணம், இந்த சிறிய செயற்கைக்கோள் அமெரிக்க நகரங்களின் அனைத்து இடங்களையும் ‘கிறிஸ்டல் கிளியர்’ படங்களாகக் கைப்பற்றக் கூடிய ஆற்றலைக் கொண்டுள்ளது. சந்திரன் மற்றும் செவ்வாய் கிரகத்திற்குப் பயணங்களை அனுப்புவதைத் தாண்டி, சீனா மீண்டும் பரபரப்பான தலைப்புச் செய்தியை இப்போது மீண்டும் உருவாக்கியுள்ளது.

முழு அமெரிக்க நகரத்தையும் தெளிவாகப் படம்பிடிக்கும் சீனாவின் செயற்கைக்கோள்

விண்வெளியில் இருந்து அமெரிக்க நகரங்களின் அனைத்து இடங்களையும் உயர் தெளிவுத்திறன் உடன் புகைப்படங்கள் எடுக்கக்கூடிய ஒரு செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தியுள்ளதாகச் சீனா வெளிப்படையாகக் கூறியுள்ளது. வல்லுநர்களின் கருத்துப்படி, இந்த சீன செயற்கைக்கோள் வெறும் 42 வினாடிகளில் முழு அமெரிக்க நகரத்தையும், அதன் பகுதியில் இருக்கும் அனைத்து தகவலையும் புகைப்படங்களாகக் கைப்பற்றுகிறது. இந்த தெருக்களில் இராணுவ வாகனத்தை உணர்ந்து அவற்றில் என்ன வகை ஆயுதம் எடுத்துச் செல்லப்படுகிறது என்ற போதுமான தகவலையும் காட்டுகிறது.

அமெரிக்க இராணுவம் திணறுவதற்கு உண்மை காரணம் என்ன?

இதனால் தான் அமெரிக்க ராணுவம் இப்போது பெரிய சிக்கலில் இருப்பதாகத் திணறியுள்ளது. இந்த பெய்ஜிங்-3 என்ற செயற்கைக்கோள், கடந்த ஜூன் மாதம் சீனாவால் ஏவப்பட்ட ஒரு டன் வர்த்தக செயற்கைக்கோள் என்பது குறிப்பிடத்தக்கது. இது சான் பிரான்சிஸ்கோ விரி குடாவின் மையப் பகுதியில் (3,800 சதுர கிலோமீட்டர்) ஆழமான ஆய்வை முடித்துவிட்டது என்று திட்டத்தில் ஈடுபட்டுள்ள விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். சீனா இதுவரை பல்வேறு நோக்கங்களுக்காகப் பல புவி கண்காணிப்பு செயற்கைக்கோள்களை ஏவியுள்ளது.

இதற்கு முன் சீனா அனுப்பிய அதிநவீன செயற்கைக்கோள் என்ன ஆனது?

முன்னதாக, டிசம்பர் 26 அன்று, சீனா ஒரு புதிய செயற்கைக்கோளை ஒரு கேமராவுடன் ஏவியது. இது தரையின் ஐந்து மீட்டர் தெளிவுத்திறன் புகைப்படங்களை எடுக்கக் கூடியது என்று சீனா தேசிய விண்வெளி நிர்வாகம் (சிஎன்எஸ்ஏ) கூறியிருந்தது. Ziyuan-1 02E அல்லது “பைவ் மீட்டர் ஆப்டிகல் சாட்டிலைட் 02” என்று அழைக்கப்படும் இந்த செயற்கைக்கோள், சீனாவின் ஷாங்க்சி மாகாணத்தில் உள்ள டையுவான் (Taiyuan) செயற்கைக்கோள் ஏவுகணை மையத்திலிருந்து நீண்ட மார்ச்-4C ராக்கெட் மூலம் ஏவப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.