திருவணந்தபுரத்தில் பழைய பொருள்கள் சேமிப்பு குடோனில் பற்றி எரிந்த தீ..

கேரளா மாநிலம் திருவனந்தபுரம் நகரத்தின் மைய பகுதியில் ஏற்பட்ட பெரும் தீ விபத்தால் பரபரப்பு.

கேரளா மாநிலம் திருவனந்தபுரம் கிள்ளிப்பாலம் பகுதியில் ஆக்கர் கடையின் குடோனில் பகல் 12 மணிக்கு தீ விபத்து ஏற்பட்டது. அந்த பகுதியில் 100 க்கும் மேற்பட்ட வீடுகள், தனியார் மல்டி speciality மருத்துவமனை அதே போல் நூற்றுக்கணக்கான வணிக நிறுவனங்கள் அமைந்துள்ளது. திடீரென ஏற்பட்ட தீ விபத்து மள மளவென பரவி அருகில் உள்ள ஒரு ஹோட்டல் மற்றும் ஒரு வீட்டில் தீ படர்ந்து அப்பகுதி புகை மண்டலமாக காட்சி அளித்தது.

இதனைத்தொடர்ந்து பொது மக்கள் தெரிவித்த தகவலின் அடிப்படையில் திருவனந்தபுரம் நகரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள 8க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும் அருகாமையில் உள்ள வீடுகளில் இருந்த மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தினர்.

தீயணைப்பு வீரர்கள் பல மணி நேரம் நீண்ட முயற்சிக்கு பின்னர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். சம்பவ இடத்திற்கு வந்த கேரளா பொது கல்விதுறை அமைச்சர் சிவன்குட்டி மற்றும் போக்குவரத்துதுறை அமைச்சர் ஆண்டனி ராஜு ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். நல் வாய்ப்பாக உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது. நகரபகுதியில் திடீர் ஏற்பட்ட தீ விபத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தீ விபத்து குறித்து திருவனந்தபுரம் சிட்டி போலீஸ் கமிஷனர் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.