புதிய முதலீடுகளினால் மாத்திரமே அந்நியச் செலாவணி கையிருப்பு பிரச்சினைக்கு தீர்வு…..

புதிய முதலீடுகள் ஊடாக மாத்திரமே அந்நியச் செலாவணி கையிருப்புப் பிரச்சினைக்கு தீர்வுகாண முடியும் என்று கைத்தொழில் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்தார்

கைத்தொழில் அமைச்சுக்கு உட்பட்ட தொழில் பேட்டைகளில் 32 தொழிற்சாலைகளை ஆரம்பிப்பதற்காக ‘வெற்றிபெறும் நாடு மலரும் கைத்தொழில்’ என்ற பெயரில் 60 முதலீட்டாளர்களுக்கு காணிகள் வழங்கப்பட்டன. புதிய முதலீட்டாளர்களுக்கு கைத்தொழில் நகரங்களில் காணிகளை வழங்கும் நிகழ்வு கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்றுமுன்தினம் (6) இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் உரையாற்றி கைத்தொழில் அமைச்சர் விமல் வீரவன்ச இதுதொடர்பாக மேலும் தெரிவிக்கையில்,
வெளிநாட்டு நிதிக் கையிருப்புத் தொடர்பில் தற்போது நிலவும் பிரச்சினைக்கு புதிய முதலீட்டாளர்கள் ஊடாக மாத்திரமே நிரந்தரத் தீர்வைக் காண முடியும்.

ஏற்றுமதியை அடிப்படையாகக் கொண்ட கைத்தொழில்களை உருவாக்குவது இதற்கான ஒரு தீர்வாகும். சர்வதேச சந்தைகளை வெற்றிகொள்ளக்கூடிய கைத்தொழிலாளர்கள் உருவாக்கப்பட வேண்டும். கைத்தொழிலாளர்களுக்கு நன்மைபயக்கும் சூழலை கட்டியெழுப்ப அரசாங்கத்தால் முடிந்திருப்பதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

முதலீட்டு வலயங்களை நாடு முழுவதிலும் விரிவுபடுத்தும் சேவையை அமைச்சின் செயலாளர் ஜென்ரல் தயாரத்னநாயக்க சுட்டிக்காட்டினார்.

Leave A Reply

Your email address will not be published.