கட்டுநாயக்க விமான நிலைய தொழுகை அறையில் பிரார்த்தனைகளில் ஈடுபடுமாறு வேண்டுகோள்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் தொழுகைக்காக ஒதுக்கப்பட்டுள்ள தொழுகை அறையில் சிறிது நேரமாவது தங்கிவிட்டுச் செல்லுமாறு, அனைத்து முஸ்லிம்களையும் விமான நிலைய ஆணையம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

விமான நிலையத்தில் குறித்த அறையில் யாரும் தொழுகை நடாத்தாததால், இந்த அறை பயன்படுத்தப்படாமல் காலியாக உள்ளன. இந்த அறையை முஸ்லிம்கள் தொழுகைக்காகப் பயன்படுத்தாவிட்டால், இந்த அறை வேறு தேவைகளுக்காகப் பயன்படுத்தப்படும் என, விமான நிலைய ஆணையம் முடிவு செய்துள்ளது.

எனவே, இந்த இடம் தொலைந்து போகாமல் இருக்க, கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வரும் முஸ்லிம் விமானப் பயணிகள் 5 முதல் 10 நிமிடங்கள் வரையிலாவது இங்கு தரித்துச் சென்று தொழுகை மற்றும் பிரார்த்தனைகளில் ஈடுபடுமாறும், ஆணையம் முஸ்லிம்களை மேலும் கேட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.