யுவனின் அலேக்காக வாய்ப்பைப் தட்டிப் பறித்த பிரபல இசையமைப்பாளர்!

அஜித் நடிப்பில் கடந்த இரண்டு வருடங்களாக எந்த படமும் ரிலீஸ் ஆகாததால், போனி கபூர் தயாரிப்பில் ஹெச் வினோத் இயக்கத்தில் உருவாகியிருக்கும் வலிமை திரைப்படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்த்த நிலையில் கொரோனா பரவல் காரணமாக ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் இந்தப் படத்தின் டீசர், டிரைலர் மற்றும் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்றது. அத்துடன் வலிமை படத்தின் ஸ்டண்ட் காட்சி குறித்த போஸ்டர்களும் ரசிகர்களின் கவனத்தைப் பெற்றது. இந்நிலையில் வலிமை படத்தில் யுவன் சங்கர் ராஜா இசையமைக்க ஜிப்ரான் பிஜிஎம் போட்டுள்ளார்.

ஏனென்றால் யுவனின் பிஜிஎம் தல அஜித்துக்கு திருப்தி அளிக்கவில்லை. அத்துடன் யுவன் சங்கர் ராஜா ஆபீஸ் அட்மினிஸ்ட்ரேஷன் சிறப்பாக செயல்படாமல் வலிமை படத்தின் இயக்குனரான ஹெச் வினோத்தை இரண்டு மாதம் அலைக்கழிக்க வைத்துள்ளாராம்.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

எனவே இதனால் வெறுத்துப்போன வினோத் இளம் இசையமைப்பாளரான ஜிப்ரான் இசையமைக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறாராம். இதனால் இசையமைப்பாளர் குறித்து என்ன முடிவை எடுப்பது என்று ஆடியோ நிறுவனத்திற்கும் வலிமை படத்தின் இயக்குனர் வினோத்திற்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.

ஆனால் தல அஜித்துக்கு யார் வேண்டுமானாலும் வலிமை படத்தில் இசை அமைக்கலாம். ஆனால் பிஜிஎம் தரமாக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளாராம். ஆகையால் வலிமை படத்தின் இசையமைப்பாளர் யார் என்று படக்குழுவினர் விரைவில் முடிவெடுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் அதற்கிடையில் நடைபெறும் பிரச்சனைகள் தற்போது கோலிவுட்டில் பரவலாக பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது. இவ்வாறு வலிமை படத்தில் ஏற்பட்டுள்ள அனைத்து சிக்கல்களும் சரியாகி கூடிய விரைவில் ரிலீஸாகும் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பு.

Leave A Reply

Your email address will not be published.