அறிமுக வீரர்களுடன் களமிறங்கும் ,இலங்கை அணி.

ஜிம்பாப்வே அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளது.
இரு அணிகளுக்கும் இடையேயான முதல் இருநாள் போட்டி ஜனவரி 16ஆம் தேதியும், இரண்டாவது போட்டி ஜனவரி 18ஆம் தேதியும், மூன்றாவது போட்டி ஜனவரி 21ஆம் தேதியும் பல்லகலேவில் நடைபெறவுள்ளது.

இந்நிலையில் இலங்கை கிரிக்கெட் வாரியம் இத்தொடருக்கான இலங்கை அணியை இன்று அறிவித்துள்ளது. இதில் வீரர்களுக்கு காயம் மற்றும் கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதன் காரணமாக அறிமுக வீரர்களைக் அணியில் சேர்த்துள்ளது.
அதன்படி வநிந்து ஹசரங்கா, குசால் பெரேரா ஆகியோர் காயம் காரணமாகவும், அவிஷ்கா ஃபெர்னாண்டோ, கமில் மிஷ்ரா, ஜெனித் லியங்கே ஆகியோர் கரோனா தொற்று காரணமாகவும் இத்தொடரிலிருந்து விலகியுள்ளனர்.

இலங்கை அணி: தசுன் ஷானகா (கே), பதும் நிஸ்ஸங்க, மினோத் பானுக, சரித் அசலங்க, மஹீஷ் தீக்ஷனா, சாமிக்க கருணாரத்ன, ஜெஃப்ரி வான்டர்சே, நுவான் துஷார, ரமேஷ் மெண்டிஸ், பிரவீன் ஜயவிக்ரம, துஷ்மந்த சமீர, சமிக குணசேகர, தினேஷ் சந்திமால், குசல் மெண்டிஸ், நுவான் பிரதீப், ஷிரான் ஃபெர்னாண்டோ, கமிந்து மெண்டிஸ்.
காத்திருப்பு வீரர்கள்: அஷேன் பண்டார, புலின தரங்கா, நிமேஷ் விமுக்தி, ஆஷியன் டேனியல், அசித்த ஃபெர்னாண்டோ, விஷ்வா ஃபெர்னாண்டோ ஆகியோர் காத்திருப்பு வீரர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.