மத்திய அதிவேக வீதியின் போக்குவரத்துக்கான கட்டணங்கள் குறித்த வர்த்தமானி வெளியீடு….

மத்திய அதிவேக வீதியின் மீரிகம முதல் குருநாகல் வரையான பகுதி நேற்று திறக்கப்பட்டதோடு போக்குவரத்துக்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இன்று மதியம் 12 மணிவரையில் குறித்த வீதியில் கட்டணம் எதுவும் அறவிடப்படவில்லை என நெடுஞ்சாலைகள் அமைச்சு அறிவித்துள்ளது.

இதனை தொடர்ந்து குறித்த அதிவேக வீதியைப் பயன்படுத்தும்போது அறவிடப்படும் கட்டணங்கள் குறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய சிறிய வாகனங்கள் இரண்டு பரிமாற்று நிலையங்களுக்கு இடையில் பயணிக்கும்போது 100 ரூபாவும், பெரிய வாகனங்கள் பயணிக்கும்போது 150 ரூபாவும் அறவிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தவிர மீரிகம முதல் குருநாகல் வரையில் பயணிக்கும் சிறிய வாகனங்களுக்கு 250 ரூபா கட்டணம் அறவிடப்படும் அதேவேளை பெரிய ரக வாகனங்களுக்கு 350 ரூபா முதல் 550 ரூபா வரை அறிவிடப்படும் என குறித்த வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேவேளை எதிர்வரும் 20 ஆம் திகதி முதல் மத்திய அதிவேக வீதியில் பொது போக்குவரத்து சேவைகளை ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில், கொழும்பு – கண்டி மற்றும் கொழும்பு – குருணாகல் பகுதிகளுக்கு இடையிலான பஸ் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் நிலான் மிரண்டா குறிப்பிட்டுள்ளார்.

அதிவேக வீதியூடான பஸ் கட்டணங்கள் எதிர்வரும் 2 நாட்களில் அறிவிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.