கோவின் இணையதளத்தில் இருந்து தனிநபர் தகவல்கள் கசிந்ததா? மத்திய அரசு விளக்கம்!

கோவின் இணையதளத்தில் இருந்து ஆயிரக்கணக்கான மக்களின் தனிப்பட்ட தகவல்கள் அடங்கிய விவரங்கள் கசிந்ததாக செய்திகள் வெளியான நிலையில், அப்படி எந்தவொரு தனிநபரின் தகவலும் கோவிட் இணையதளத்தில் இருந்து கசியவில்லை என மத்திய சுகாதார அமைச்சகம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

நாட்டில் கொரோனா தடுப்பூசி இயக்கத்தை நிர்வகிக்கப் பயன்படுத்தப்படும் கோவின் செயலியில் இருந்து தரவுகள் கசிந்ததாக வெளியான செய்திகளுக்கு மத்திய சுகாதார அமைச்சகம் வெள்ளிக்கிழமை நிராகரித்து விளக்கம் அளித்துள்ளது.

அதில், கோவிட் இணையதளத்தில் சேமிக்கப்பட்ட எந்தவொரு தனிநபரின் தகவலும் கசியவில்லை என திட்டவட்டமாக கூறியுள்ளது.

கோவின் இணையதளம் பாதுகாப்பானது என்றும் பயனாளியிடமிருந்து பெறப்பட்ட முழுத் தரவுகளும் கோவின் இணையதளத்தில் பாதுகாப்பாக உள்ளது.

எந்த பயனாளியிடமிருந்தும் முகவரி போன்ற ஆவணங்களையோ அல்லது ஆர்டி-பிசிஆர் சோதனை முடிவுகளையோ சேகரிக்காததால் கோவின் இணையதளத்தில் இருந்த ஆவணங்கள் கசிவதாக வந்த தகவல் சரியானது அல்ல என்றும், இது குறித்து விசாரணை நடத்தப்படும் என்றும் மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும், கோவின் இணையளத்தில் ஒரே போன் எண்ணில் 4 பேர் பதிவு செய்யலாம் என்ற முறை அமலில் இருந்தது. தற்போது இதில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதால், ஒரு போன் எண்ணில் 6 பேர் பதிவு செய்ய முடியும்.

தவறான பதிவின் காரணமாக ஒரு சிலருக்கு தடுப்பூசி சான்றிதழ்களும் உருவாக்கப்பட்டிருந்தாலும், தடுப்பூசி நிலவரத்தை பயனாளியால் சரிசெய்து கொள்ள முடியும் என்றும் மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.