மட்டக்களப்பு மாவட்டத்தின் சேதன பசளை உற்ப்பத்தி தொடர்பான செயலமர்வு.

ஜனாதிபதியின் எண்ணக்கருவில் உதித்த சுபிட்சத்தின் நோக்கு கொள்கை பிரகடனத்துக்கு அமைவாக பசுமையான நஞ்சற்ற நாடு எனும் தொனிப்பொருளில் மட்டக்களப்பு மாவட்ட மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் இயற்கை உர உற்ப்பத்தி தொடர்பான செயலமர்வு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க
அதிபர் க .கருணாகரன் தலைமையில் இடம்பெற்றது.

இதன் போது கருது தெரிவித்த அரசாங்க அதிபர் விவசாய துறையில் உள்ளவர்கள் விவசாயிகளின் உற்ப்பத்தியை அதிகரிப்பதை நோக்காக கொண்டு செயற்படவேண்டும். இவ்வாறு செயற்படுவதன் மூலம் அதிக விளைச்சலை பெறமுடியும்.

இயற்க்கை உரத்தினை துரிதமாகவும் வினைத்திறனாகவும் உற்பத்திசெய்ய வேண்டும் இதற்க்காக இராணுவத்தினரின் ஒத்துழைப்பு கிடைக்கப்பெற்றுள்ளது.. பெரும்போகத்தின் போது இயற்கை உரத்தினை மட்டும் பாவனைக்கு விவசாயிகளுக்கு சிபாரிசு செய்யப்பட்டது.

இம்முறை இரசாயன உரம் தனியாரினால் விற்பனை செய்யப்படவுள்ளது இரசாயன உரப்பாவனையினால் தொற்றாநோய் அதிகளவில் எற்ப்படுகிறது. மற்றும் எமது நாட்டின் உணவு பாதுகாப்பினை அனைத்து உத்தியோகத்தர்களும் உறுதிப்படுத்தவேண்டும் என தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.