ஈஸ்டர் தாக்குதலுக்கு மைத்திரியே பொறுப்புக்கூற வேண்டும்! – ரவி சுட்டிக்காட்டு.

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலுக்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொறுப்புக்கூற வேண்டும் என்று முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது:-

“நல்லாட்சியின்போது ஜனாதிபதியாகச் செயற்பட்ட மைத்திரிபால சிறிசேனவே பாதுகாப்பு அமைச்சராகவும் செயற்பட்டார். எனவே, உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலுக்கு அவர் பொறுப்புக்கூற வேண்டும்.

ஐந்தாண்டுகள் மைத்திரி ஜனாதிபதியாகச் செயற்பட்டார். அந்தக் காலப்பகுதியில் அவர் தேங்காய் துருவினாரா?

நல்லாட்சியின்போது 90 வீதமான நல்ல விடயங்களை ஐக்கிய தேசியக் கட்சியே மேற்கொண்டது. எம்மைப் பழிவாங்கும் நோக்கிலேயே மைத்திரி தரப்பு செயற்பட்டது. அந்த உண்மை வெளியில் வரும்.

அதேவேளை, மத்திய வங்கியானது எனக்குக் கீழ் இருக்கவில்லை. அரச வங்கிகள் அப்போதைய அமைச்சர் கபீர் ஹாசீம் வசம்தான் இருந்தன. எனவே, பிணைமுறி விவகாரம் தொடர்பில் அவரிடம்தான் கேட்க வேண்டும்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.