12 மாவட்டங்களில் டெங்கு அபாய வலயங்களாக அறிவிப்பு.

நாட்டில் டெங்கு பரவும் அபாயத்தில் உள்ள 12 மாவட்டங்களில் உள்ள 81 பிரதேச செயலாளர் பிரிவுகளை தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு அடையாளம் கண்டுள்ளது.

அதனடிப்படையில் கொழும்பு, கம்பஹா, யாழ்ப்பாணம், புத்தளம், களுத்துறை, கண்டி, இரத்தினபுரி, அம்பாறை, திருகோணமலை, குருநாகல் மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களில் கடுமையான டெங்கு அளவுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

அத்துடன் ஜனவரி மூன்றாம் வாரத்தில் கொழும்பு மாவட்டத்தில் அதிகளவான டெங்கு நோயாளர்களும் பதிவாகியுள்ளனர்.

இதேவேளை கொழும்பு மாவட்டத்தில் மாத்திரம் 411 பேரும், கம்பஹாவில் 305 பேரும், களுத்துறையில் 120 பேரும், குருநாகலில் 109 பேரும், புத்தளத்தில் 96 பேரும், காலியில் 83 பேரும், கண்டியில் 73 பேரும் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்த வருடத்தில் இதுவரை 7 ஆயிரம் டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதுடன் 2 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.