சுப்பர்மடம் மீனவர்கள் போராட்டத்தில் சிறிதரன் எம்.பி. பங்கேற்பு!

இந்திய படகுகளின் எல்லை தாண்டிய அத்துமீறலை நிரந்தரமாக தடுத்து நிறுத்த வலியுறுத்தி ஒருங்கிணைக்கப்பட்ட வகையில் பருத்தித்துறை – சுப்பர்மடம் பகுதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் தொடர் சாலை மறியல் போராட்டத்தில் த.தே.கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் பங்கேற்றிருந்தார்.

தொடர் சாலை மறியல் போராட்டத்தின் மூன்றாவது நாளாகிய நேற்றைய தினம் (பெப்-02) இரவு பருத்தித்துறை – சுப்பர்மடம் பகுதிக்கு நேரில் சென்று ஆதரவு தெரிவித்து கலந்துரையாடியிருந்தார்.

இந்திய மீன்பிடி படகுகளின் அத்துமீறலைக் கண்டித்தும் வத்திராயன் பகுதியில் சடலமாக மீட்கப்பட்ட 2 மீனவர்களுக்கு நீதி கோரியும் வடமராட்சி மீனவர்கள் சமூகம் சார்பில் ஒருங்கிணைக்கப்பட்ட வகையில் பருத்தித்துறை – சுப்பர்மடம் பகுதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டத்திற்கு அரசியல் தரப்பினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.