13 மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்த ஆசிரியருக்கு ஆயுள் தண்டனை .

இந்தோனேசியாவின் மேற்கு ஜாவாவில் உள்ள பாண்டுங் நகரில் ஒரு ஒரு உறைவிடப் பள்ளியை சேர்ந்த ஆசிரியர் ஒருவர் தனது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து கர்ப்பமாக்கியதாக பாதிக்கப்பட்ட மாணவியின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டர்.

விசாரணையின்போது போலீசாருக்கு திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. அப்பள்ளியின் ஆசிரியரான ஹெரி வைரவன் என்பவர் ஐந்து ஆண்டுகளாக கல்வி உதவித்தொகையில் தங்கி படிக்கும் ஏழை குடும்பங்களைச் சேர்ந்த 13 மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. இதில் 8 மாணவிகள் அவரால் கருவுற்றனர்.

நாட்டை அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்த சம்பவமானது மேற்கு ஜாவாவில் உள்ள பாண்டுங் மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் குற்றவாளிக்கு மரணதண்டனை விதிக்கவேண்டும் என வழக்கறிஞர்கள் நீதிபதிக்கு கோரிக்கை வைத்தனர். இந்த நிலையில், நீதிபதி ஆசிரியருக்கு ஆயுள்தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார்.

Leave A Reply

Your email address will not be published.