பயங்கரவாதச் சட்டத்தை நீக்கக் கோரி அம்பாறையில் கையெழுத்து வேட்டை.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இரத்துச் செய்யக் கோரி நாடளாவிய ரீதியில் இடம்பெறும் கையெழுத்துப் போராட்டத்தின் ஓரங்கமாக இன்று அம்பாறை மாவட்டத்தில் கையெழுத்து வேட்டை நடைபெற்றது.

இன்று காலை 10 மணியளவில் காரைதீவு பொதுச்சந்தைக்கு முன்னால் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அம்பாறை மாவட்ட அமைப்பாளரும் காரைதீவு தவிசாளருமான கி.ஜெயசிறில் தலைமையில் கையெழுத்து வேட்டை ஆரம்பமாகியது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் த.கலையரசன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேத்திரன், ஞா.சிறிநேசன், கவீந்திரன் கோடீஸ்வரன் மற்றும் மட்டக்களப்பு மாநகர சபை மேயர் தி.சரவணபவன் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் முதலில் கையெழுத்திட்டனர்.

அதைத் தொடர்ந்து நூற்றுக்கணக்கான மக்கள் வந்து கையெழுத்திட்டனர்.

இதேவேளை, நண்பகல் 12 மணியளவில் கல்முனை பிரதான பஸ் நிலையத்துக்கு அருகாமையிலும் கையெ ழுத்து வேட்டைநடைபெற்றது.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வாலிப முன்னணி இதை ஏற்பாட்டை செய்திருந்தது.

Leave A Reply

Your email address will not be published.