ஊடகவியலாளர் நிமலராஜனை கொலை செய்த நபர் பிரித்தானியாவில் கைது

20 வருடங்களுக்கு முன்னர் வடக்கில் உயர் பாதுகாப்பு வலயத்தில் வைத்து தமிழ் சர்வதேச ஊடகவியலாளர் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் பிரித்தானிய பொலிஸாரின் போர்க்குற்ற விசாரணை பிரிவினர் ஒருவரை கைது செய்துள்ளனர்.

பெப்ரவரி 22ஆம் திகதி ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜன் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் Northamptonshire, central Englandல் வைத்து கைது செய்யப்பட்ட 48 வயதுடைய நபர் ஒருவர் விடுவிக்கப்பட்ட போதிலும் , அவர் தொடர்ந்தும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றம் தொடர்பில் வெளிநாட்டு பொலிஸார் மேற்கொண்ட முதல் கைது நடவடிக்கையாக இது கருதப்படுகிறது. கைது செய்யப்பட்ட நபரின் பெயர் அல்லது பூர்வீகத்தை போலீசார் இதுவரை வெளியிடவில்லை.

லண்டன் மெட்ரோபொலிட்டன் காவல்துறையின் பயங்கரவாத எதிர்ப்புக் கட்டளையின் தலைமைத் தளபதி ரிச்சர்ட் ஸ்மித் கூறுகையில், “இது ஒரு முக்கியமான மற்றும் சிக்கலான விசாரணையில் ஒரு முக்கியமான வளர்ச்சியாகும்.

“குறிப்பாக நிமலராஜனின் படுகொலை தொடர்பில் மேலும் பல தகவல்கள் தெரிந்தவர்கள் இருக்கலாம். திரு. நிமலராஜனின் குடும்ப உறுப்பினர்களுக்கு நீதியை நிலைநாட்ட முன் வந்து உதவுமாறு நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.

விவரங்களை வழங்க விரும்புவோர், SO15Mailbox.WarCrimesTeam@met.police.uk என்ற மின்னஞ்சல் முகவரிக்கு நேரடியாக போர்க் குற்றப்பிரிவுக்கு தகவல் அனுப்பலாம்.

பிரித்தானியாவில் உள்ள இலங்கை சமூகத்தைச் சேர்ந்தவர்களிடம் மேலும் தகவல்கள் இருக்கலாம் என லண்டன் பொலிஸ் போர்க்குற்றப்பிரிவு நம்புகிறது.

(theleader.lk)

Leave A Reply

Your email address will not be published.