வேலை நாட்களை நான்கு தினங்களாக குறைக்க மத்திய வங்கி அரசுக்கு யோசனை.

அரச வங்கிகள் CPCக்கு கடன் வழங்குவதை நிறுத்தவும் ஆலோசனை

நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடியை கவனத்திற்கொண்டு வாரத்தில் வேலைநாட்களை நான்கு தினங்களாக குறைத்து வேலைசெய்யும் மணித்தியாலத்தை அதிகரிப்பதற்கு மத்திய வங்கி யோசனைகளை முன்வைத்துள்ளது.

அதற்கிணங்க, காலை 7.30 மணி முதல் பிற்பகல் 5.30 மணி வரை வேலை நேரத்தை முன்னெடுத்துச் செல்லும் வகையில் அந்த யோசனையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நிறுவனங்களிலிருந்து வேலை செய்யும் பணியாளர் காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை தமது பணிகளை மேற்கொண்டு நேரகாலத்தோடு வீடுகளுக்குச் செல்ல சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் என்று மத்திய வங்கி குறித்த யோசனையில் சுட்டிக்காட்டியுள்ளது.

அதேவேளை, தனியார் வாகன உபயோகத்தை குறைத்து பொது போக்குவரத்துக்களை முடிந்தளவு உபயோகப்படுத்துமாறு அதன் மூலம் மத்திய வங்கி கேட்டுக்கொண்டுள்ளது.

அத்துடன் நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடி மற்றும் எரிபொருள் பரிமாற்றத்தை குறைத்துக்கொள்ளும் வகையில் மக்கள் சிக்கனத்தைக் கடைப்பிடிக்குமாறு ஊடகங்களுக்கூடாக பாரிய பிரசாரங்களை முன்னெடுப்பது அவசியமென்றும் அந்த யோசனைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. டொலர் தட்டுப்பாட்டின் காரணமாக நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடியை கவனத்திற்கொண்டு நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைவதை தவிர்த்துக்கொள்ளும் வகையில் பல்வேறு யோசனைகள் அடங்கிய பத்திரமொன்றை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் அரசாங்கத்திற்கு சமர்ப்பித்துள்ளார்.

நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடி தொடர்பில் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விசேட அமைச்சரவைக் கூட்டத்தின் போது மத்திய வங்கியின் ஆளுநரினால் மேற்படி யோசனை அரசாங்கததிற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.