மாவட்ட செயலகத்தில் இணையவழி தொழிற்சந்தை!

முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தின் மனிதவலு வேலைவாய்ப்புத் திணைக்களத்தினரால் முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள வேலையற்ற இளைஞர் யுவதிகளுக்கு தொழில்வாய்ப்பினைப் பெற்றுக்கொடுக்கும் முகமாக தொழில் சந்தை ஒன்று இன்று (28) திங்கட்கிழமை காலை 9.00மணிக்கு இணையவழி செயலியூடாக(Zoom) இடம்பெற்றது.

குறித்த நேர்முகத் தேர்வின் ஆரம்ப நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன், மேலதிக அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் மற்றும் பதவிநிலை உத்தியோகத்தர்கள் பிரசன்னமாகியிருந்தனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள பல்துறை நிறுவனங்கள் இணைத்து வேலைவாய்ப்பினை வழங்கும் இந் நேர்முகத்தேர்வில் 10 நிறுவனங்களும், 75 இளைஞர் யுவதிகள் கலந்துகொண்டிருந்தனர்.

மேலும் இதனூடாக தெரிவுசெய்யப்பட்டவர்களிற்குரிய நேர்முகத்தேர்வினை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் நேரடியாக தொடர்புகொண்டு நடாத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.