இன்று நள்ளிரவு முதல் முச்சக்கரவண்டி கட்டணமும் அதிகரிக்கிறது….

இலங்கையில் இன்று நள்ளிரவு முதல் முச்சக்கர வண்டிகளின் கட்டணங்களை அதிகரிக்க உள்ளதாக முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதனடிப்படையில், நகர பகுதிகளில் முதல் ஒரு கிலோ மீற்றருக்கு 70 ரூபாவும் இரண்டாவது கிலோ மீற்றரில் இருந்து ஒரு கிலோ மீற்றருக்கு 55 ரூபாவும் அறவிடப்படும் என அந்த சங்கத்தின் தலைவர் சுதில் ஜயருக் தெரிவித்துள்ளார்.

அனைத்து விலைகளும் அதிகரித்துள்ளது. இதனால், பொது மக்களுக்கு சிரமம் ஏற்படாத வகையில் நாங்கள் கட்டணங்களை உயர்த்த முடிவு செய்துள்ளோம்.

தூர பிரதேசங்களில் முதல் ஒரு கிலோ மீற்றருக்கு 80 ரூபாவும் இரண்டாவது கிலோ மீற்றரில் இருந்து 60 ரூபாவும் அறவிடுவது என தீர்மானிக்கப்பட்டுள்ளது. இரண்டாவது கிலோ மீற்றருக்கு 5 ரூபாய் மாத்திரமே அதிகரிக்கப்பட்டுள்ளது. முதல் ஒரு கிலோ மீற்றருக்கு 10 ரூபாய் அதிகரிக்கப்பட்டுள்ளது.

முழு பயணத்திற்கு பொது மக்களுக்கு 10 ரூபாய் மாத்திரமே அதிகரிக்கும். எரிபொருள் விலைகள் 50 முதல் 70 ரூபாய் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. எனினும் நாங்கள் மக்களுக்காக சிறிய தொகையையே அதிகரித்துள்ளோம் எனவும் ஜயருக் குறிப்பிட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.