பராக் ஒபாமாவுக்கு கொரோனா தொற்று உறுதி!

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் ,இது குறித்து அவர் ட்விட்டர் பக்க பதிவில், தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக தொண்டை வலியால் அவதிப்பட்டு வந்த நிலையில், தொற்று பரிசோதனை செய்துகொண்டதில் தனக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது நலமுடன் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.