கோட்டாவின் மாநாட்டைக் ஹக்கீம், ரிஷாத் கட்சிகளும் புறக்கணிப்பு!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் இன்று நடைபெறும் சர்வகட்சி மாநாட்டில் கலந்துகொள்வதில்லை என்ற தீர்மானத்தை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் எடுத்துள்ளது.

நேற்றிரவு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அதியுயர்பீடக் கூட்டம் இடம்பெற்றபோதே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டது.

‘சூம்’ தொழில்நுட்பத்தினூடாகவே இந்த உயர்பீடக் கூட்டம் இடம்பெற்றது எனக் கட்சியின் செயலாளர் நாயகம் எஸ்.சுபைர்தீன் தெரிவித்தார்.

இந்தக் கூட்டத்தில் கடந்த காலங்களில் சர்வகட்சி மாநாட்டின் அவசியம் தொடர்பில் இந்த அரசுக்குச் சிறுபான்மைக் கட்சிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்த போதும் இந்த அரசு இது தொடர்பில் எந்தவித ஆக்கபூர்வமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.

அரசு தன்னுடைய பிரச்சினைகளை இந்தச் சந்தர்ப்பத்தில் மூடிமறைத்துக்கொள்வதற்காகவே இந்தச் சர்வகட்சி மாநாட்டைக் கூட்டுவதற்கு முனைந்திருப்பது தொடர்பிலேயே அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளது.

அந்தவகையில் இன்றைய கூட்டத்தில் கலந்துகொள்வதில்லை என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் செயலாளர் நாயகம் எஸ். சுபைர்தீன் தெரிவித்தார்.

இதேவேளை, இன்று நடைபெறவுள்ள சர்வகட்சி மாநாட்டில் தமது கட்சி கலந்துகொள்ளாது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீமும் அறிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.