டொன் ஜுவான் ரணிலை வீழ்த்திய , அமெரிக்க காக்கை பசில் !

பசிலின் பரம எதிரிகளான விமல் மற்றும் உதய கம்மன்பிலவின் கூற்றுகளில் இருந்து ஒன்று தெளிவாகிறது. 

அதாவது இன்று பசில் இந்தியாவினதும் அமெரிக்காவினதும் மிகவும் நம்பிக்கைக்குரிய கூட்டாளியாக மாறியுள்ளார் என்பதாகும்.

முன்னொரு காலத்தில் , இந்தியாவினதும் அமெரிக்காவினதும் மிகவும் நம்பகமான கூட்டாளியாக  அனைவராலும் பார்க்கப்பட்டவர் ரணில் .

எனினும் 2015-2019 அரசாங்கத்தின் போது மஹிந்தவின் அரசியல் செயற்பாடுகள் காரணமாக இந்தியாவும் ,  அமெரிக்காவும் இலங்கையுடன் எந்தவிதமான ஒப்பந்தங்களையும் மேற்கொள்ள முடியாமல் போனது.

அச்சமயத்தில் ரணிலின் இயலாமையை இந்தியாவும் , அமெரிக்காவும் தெளிவாகத் கண்டு கொண்டது. ரணில் ஒரு பயனற்ற நபர் என்பதை அவர்கள் உணர்ந்தார்கள்.

அதன்படி 2019ஆம் ஆண்டுக்குள் ரணிலின் அத்தியாயத்தை முடிவுக்கு கொண்டுவர இந்தியாவும் அமெரிக்காவும் நடவடிக்கை எடுத்தன.

இவ்வாறு ரணிலை கவிழ்த்த இந்தியாவும் ,  அமெரிக்காவும் அதற்கு பதிலாக பசிலை தெரிவு செய்தன.

அதன்படி இந்தியாவையும் அமெரிக்காவையும் சாமர்த்தியமாக சமன் செய்து ஆட்டத்தை ஆடத் தொடங்கினார் பசில்.

இதற்கிடையில், சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாகத்தை தன் பக்கம் ஈர்க்கும் பொறுப்பையும் பசில் ஏற்றுக்கொண்டார்.

முன்னதாக, சர்வதேச நாணய நிதியம் குறித்து இலங்கைக்குள் ஒரு பொருளாதார நடவடிக்கை என்றால் , அதை செய்ய தகுதியுள்ள ஒருவரென்றால் அது ரணில்தான் என வெளியே  அடையாளம் காட்டியிருந்தார்.

ஆனால் இன்று பசில் , ரணிலை ஓரம் கட்டிவிட்டு மௌனமாக சர்வதேச நாணய நிதியத்தினோடு செய்ய வேண்டியவற்றை பொறுப்பேற்று கையாள ஆரம்பித்துள்ளார்.

இவ்வாறு பசில் சர்வதேச நாணய நிதியத்தினோடு இடம் பிடித்ததில் , ரணிலுக்குள் கடும் கோபமும் ,  குரோதமும் ஏற்பட்டுள்ளது.

சமீபத்தில் பசில் , இந்தியா சென்று புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டார். இவை ஒன்றும் புதிதானவை அல்ல.  கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் போது இந்தியாவுடன் , ரணிலும் ஐ.தே.கவும் கைச்சாத்திட தீர்மானித்த ஒப்பந்தங்கள்தான் இவை. 

அவை தொடர்பாக அன்று ஐ.தே.க கட்சிக்குள்ளோ அல்லது  நாட்டுக்குள்ளோ  ஒருமித்த கருத்தை உருவாக்க ரணிலால் முடியவில்லை. எனவே, இந்தியாவுடன் ரணில் செய்துகொள்ள முயற்சித்த இந்த ஒப்பந்தங்களுக்கு கட்சிக்குள்ளும், அரசாங்கத்துக்குள்ளும், நாட்டுக்குள்ளும் பெரும் எதிர்ப்பு கிளம்பியது.

ஆனால் இன்று பசில் இந்தியாவுடன் இந்த உடன்படிக்கைகளை கைச்சாத்திட்டு அமெரிக்காவிற்கு மட்டுமன்றி உலகத்திற்கே ஒன்றைக் நிருபித்துக் காட்டியுள்ளார். அதாவது பசில் உலகத்தை தன் பக்கமாக  ஈர்த்து கையாள்வதில் வல்லவர் என காட்டியுள்ளார்.

அண்மைக்காலத்தில் அமெரிக்காவுடனான LNG டெர்மினல் ஒப்பந்தத்தையும் பசில் கடு கச்சிதமாக செய்து முடித்தார். இதன் மூலம் இலங்கையுடன் பாரிய முதலீட்டை மேற்கொள்ள அமெரிக்கா திட்டமிட்டதால் பசில் அவ்வாறு செய்தார்.

கடந்த காலத்தில் அமெரிக்கா, ராஜபக்சக்களுடன் அவ்வளவு நல்லுறவு கொள்ளாத காரணத்தினால் ,  அமெரிக்கா ராஜபக்சக்களை கையாள ஆரம்பித்ததற்கு பின்னால் ஒரு பெரிய கதை இருக்கிறது.

அப்படியிருந்த நிலைகளை தாண்டி ,  அரசாங்கத்தினுள் இருந்த கடும் எதிர்ப்பையும் மீறி பசில் அமெரிக்காவுடன் LNG டெர்மினல் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட முடிந்தது.

2019ல் கோட்டா ஆட்சிக்கு வந்ததும், இந்தியாவுக்கும் ,  அமெரிக்காவுக்கும் இடையே இருந்த கோபம்தான் அரசாங்கத்திற்கு இருந்த மிகப்பெரிய பிரச்சனையாக இருந்தது.

எனவே முதலில் இரு நாடுகளும் சமநிலையில் இருக்க வேண்டும் என்பதை பசில் உணர்ந்தார்.

ஏனெனில் 2015ஆம் ஆண்டு பலம் வாய்ந்த அரசாக இருந்த ராஜபக்ச அரசை தோற்கடித்து மகிந்தவை வீட்டுக்கு அனுப்ப இந்தியாவும் ,  அமெரிக்காவும் எதிர்க்கட்சிகளுடன் கைகோர்த்து செயல்பட்டன.

தேர்தலில் தோற்ற பின்னர் மஹிந்த “எனது தோல்வியின் பின்னணியில் இந்தியா இருக்கிறது” என பகிரங்கமாகவே கூறினார்.

எனவே, இரவு விழுந்த பாதாளத்தில் , பகலிலும் விழ முடியாது என்பதால், அமெரிக்காவோடும், இந்தியாவோடும் எதிரணிகளையோ அல்லது எதிர்க் கட்சிகளையோ  நெருங்கவிடாதபடி இரு நாடுகளையும் சமநிலைப்படுத்தும் முயற்சியை முதலில் பசில் செய்தார். இம்முறை பசில் ஆடிய ஆட்டத்துக்கு ஈடு கொடுத்து ஆட , ரணிலால் நினைத்துக் கூட பார்க்க முடியாமல் போனது.

இம்முறை பசில் ,  சர்வதேச நாணய நிதியத்தில் இணைய முடியாமல் நாத்திக் கொள்வார் என ரணில் நினைத்துக் கொண்டிருந்தார்.

ஆனால் பசில் , ரணிலே நினைத்தும் பார்க்க முடியாதவாறு காய் நகர்த்தல் ஒன்றை செய்தார். கடந்த கிறிஸ்மஸ் கால அமெரிக்க பயணத்தின் போது பசில் கைக்கு அந்த வாய்ப்பு கிடைத்தது. அமெரிக்க  பயணத்தின் போது , பசில் வாஷிங்டன் சென்று ஐ.எம்.எப். அதிகாரிகளை தனியே சந்தித்து ,  சர்வதேச நாணய நிதிய பணிகளை காதும் காதும் வைத்தது போல செய்து கொண்டு நாடு திரும்பினார். அதை ரணில் விரும்பவில்லை.

அதனால்தான் சர்வ கட்சி மாநாட்டின் போது , ரணில்  சர்வதேச நாணய நிதி வரைவு குறித்து பேசி பசிலை அசௌகரியத்துக்கு உள்ளாக்க முயன்றார். அது பெரும் பேசுபொருளாக பேசப்பட்டது.

அச்சமயம்  ரணில் , சர்வதேச நாணய நிதி வரைவை , பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என பசிலிடம் கோரிக்கை விடுத்தார் . ஆனால் ரணிலின் காலத்தில் ரணில் ,  இதற்கு  முற்றிலும் மாறுபட்ட முறையில்தான் செயற்பட்டார்.

அவரது ஆட்சி காலத்தில் , ரணில் ஐ.எம்.எப்பை சந்திக்க போவதாக குறைந்த பட்சம் நாட்டு மக்களிடமோ அல்லது அமைச்சரவையிடமோ கூட ஒரு சொல் கூட அறிவுறுத்தாமல்தான் சென்றார்.

அண்மையில் கோட்டாபய ,  அது குறித்து  பேசியது போல் , ரணில் நாட்டு மக்களுக்கு அது விடயமாக உரையாற்றக் கூட இல்லை.

அதிலிருந்து ஒரு விஷயம் தெளிவாகிறது. ரணிலைப் போல் அல்லாமல் ,  பசிலும் கோட்டாபயவும் சர்வதேச நாணய நிதியம் சம்பந்தமான பிரச்சனையில் வெளிப்படைத்தன்மையுடன் ஈடுபட்டுள்ளனர் என்பதாகும்.   அதைத்தான் ரணிலால் ஜீரணிக்க முடியாது போனது.

மறுபுறம், பசில் இந்தியாவையும், அமெரிக்காவையும், சர்வதேச நாணய நிதியத்தையும் இப்படி சமநிலைப்படுத்துவார் என விமல் , உதய கம்மன்பில ஆகியோர் கனவிலும் நினைக்கவில்லை.

அந்த வகையில் இன்றைய அரசாங்கத்திற்குள் ஒரு கொள்கையல்ல, பல கொள்கைகள் கலந்து  உள்ளதை காண முடிகிறது.

அதற்கேற்ப இன்றைய அரசுக்குள் , டிஎஸ்ஸின் கொள்கையையும் பார்க்கலாம். பண்டாரநாயக்காவின் கொள்கையையும் பார்க்கலாம். ஜே.ஆரின் கொள்கையையும் பார்க்கலாம். வெவ்வேறு ரசனைகளைக் கொண்ட அந்தக் கொள்கைகள் அனைத்தும் பசிலினால் ஒரே நேரத்தில் நிர்வகிக்கப்படுகின்றன, அதையெல்லாம் நடைமுறைபடுத்துவது வேறு யாரும் அல்ல. பசில்தான்!

முன்னரே குறிப்பிட்டது போல் பசில் , இந்தியாவையும் , அமெரிக்காவையும்,  எதிர்கட்சிகள் பக்கம் திரும்பும் வாய்ப்பை தடுப்பதன் மூலம் ,  அரசாங்கத்தைப் பாதுகாப்பதைத் தவிர வேறு எதையும் பசில் செய்யவில்லை என்பது கண்கூடாகத் தெரிகிறது.

விமலசிறி ஜயலத்
தமிழில் : ஜீவன்

Leave A Reply

Your email address will not be published.