விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியை வித்தியாசமாக கொண்டாடிய ஹசரங்கா.!

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 15-வது சீசன் கடந்த 26 ஆம் தேதி தொடங்கியது. இந்த தொடரில் நேற்று நடைபெற்ற 6-வது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

இந்த போட்டியில் பெங்களூரு அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா அணியை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்தது.

இந்த போட்டியில் சிறப்பாக பந்துவீசிய பெங்களூரு அணி வீரர் ஹசரங்கா 4 ஓவர்களில் 20 ரன்கள் மட்டுமே கொடுத்து 4 விக்கெட்களை கைப்பற்றினார். ஒவ்வொரு விக்கெட்டை வீழ்த்தும் போதும் ஹசரங்கா மைதானத்தில் வித்தியாசமான கொண்டாட்டத்தில் ஈடுபட்டார்.

போட்டி முடிந்த பிறகு தனது கொண்டாட்ட பாணி குறித்து பேசிய ஹசரங்கா கூறுகையில், ” நான் கால்பந்து போட்டிகளில் பிரேசில் மற்றும் பாரிஸ் செயின்ட்-ஜெர்மனி வீரர்களின் தீவிர ரசிகன். அவர்களது கொண்டாடும் விதத்தை அடிக்கடி பின்பற்றுவேன். எனக்கு மிகவும் பிடித்த கால்பந்து வீரர் நெய்மர்.

அவரது ஹேங் லூஸ் கொண்டாட்டத்தைதான் கொல்கத்தா அணிக்கு எதிராக நான் பின்பற்றினேன். போட்டியின் இக்கட்டான சூழ்நிலையில் 4 ரன்கள் மட்டுமே எடுத்தேன். பனி பொழிவில் சிறப்பாக பந்து வீசி 4 விக்கெட்டுகளை கைப்பற்றியது மகிழ்ச்சி அளிக்கிறது ” என அவர் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.