பெரிய சிக்ஸர் விளாசி சாதனை படைத்த லியம் லிவிங்ஸ்டோன்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி 54 ஒட்டங்களால் சிறப்பான வெற்றியை பதிவு செய்தது

15வது ஐபிஎல் தொடரின் 11வது போட்டியான இன்றைய போட்டியில் ஜடேஜா தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மாயன்க் அகர்வால் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதியது.

மும்பை Brabourne மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்றுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனான ஜடேஜா, முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு அந்த அணியின் கேப்டனும், துவக்க வீரருமான மாயன்க் அகர்வால் (4) முதல் ஓவரிலேயே விக்கெட்டை இழந்து ஏமாற்றம் கொடுத்தார். இதனையடுத்து களத்திற்கு வந்த பனுகா ராஜபக்சே 9 ரன்கள் எடுத்திருந்த போது, தோனியின் மின்னல் வேக ரன் அவுட்டால் விக்கெட்டை இழந்தார்.

இதனையடுத்து கூட்டணி சேர்ந்த லிவிங்ஸ்டோன் – ஷிகர் தவான் ஜோடி சென்னை அணியின் பந்துவீச்சை சிதறடித்து மளமளவென ரன் குவித்தது.

பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷிகர் தவான் 33 ரன்கள் எடுத்த போது விக்கெட்டை இழந்தார். முகேஷ் சவுத்ரி வீசிய ஒரு ஓவரில் 108 மீட்டர் சிக்ஸ் உள்பட அதே ஓவரில் 26 ரன்களும் குவிக்க உதவிய லியம் லிவிங்ஸ்டோன், 32 பந்துகளில் 60 ரன்கள் எடுத்த போது விக்கெட்டை இழந்தார். இதன் மூலம் இந்த IPL தொடரில் நீன்ட தூரம் சிக்சர் விளாசிய சாதனை படைத்தார்

Leave A Reply

Your email address will not be published.