தங்கத்தின் விலையில் வீழ்ச்சி.

இலங்கையில் தங்கத்தின் விலை தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி, இன்று (07) கொழும்பு செட்டித் தெருவில் தங்கத்தின் விலை கணிசமான சரிவைக் கண்டது.

அதன்படி, 22 கெரட் தங்கம் பவுன் ஒன்றின் விலை 166,000 ரூபாவாகும் மற்றும் 24 கரட் தங்கம் பவுன் ஒன்றின் விலை 180,000 ரூபாவாகும் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் 22 கெரட் தங்கம் பவுன் ஒன்றின் விலை 175,800 ரூபாவாகும் மற்றும் 24 கரட் தங்க பவுன் ஒன்றின் விலை 190,000 ரூபாவாகவும் பதிவாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.