ஒன் மேன் ஷோ ராக்கி..; KGF2 விமர்சனம்.

நடிகர்கள் – யஷ், ஸ்ரீநிதி ஷெட்டி, சஞ்சய்தத், ரவீணா, சரண், ஈஸ்வரி & அச்யுத்குமார்

இயக்கம் – பிரசாந்த் நீல்

இசை – ரவி பர்ஷுர்

ரிலீஸ் தேதி – இன்று 14 ஏப்ரல் 2022

தயாரிப்பு – ஹம்பலே பிலிம்ஸ்

நேரம் – 2 மணி நேரம் 48 நிமிடம்

KGF 1 முதல் பாகத்தில் கருடன் இறந்துவிடுவார். அந்த இடத்திலிருந்து பார்ட் 2 கதை தொடங்குகிறது.

ஆனந்த் நாக் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட, அவருக்கு பதிலாக அவரது மகன் பிரகாஷ் ராஜ் மாளவிகாவிடம் கதை சொல்கிறார்.

முதல் பாகத்தில் கருடனை வெட்டி வீசி ’KGF’ ஐ ஆள்வதற்காக தடம் பதிப்பார் ராக்கி (யஷ்). அந்த சாம்ராஜ்யத்தை எப்படி உருவாக்குகிறார்.?

வில்லன் ஒரு பக்கம், கொல்லப்பட்டதாக சொல்ல அதிரா (சஞ்சய் தத்) மீண்டும் கொலை வெறியோடு வருகிறார்.

இதனிடையில் இந்திய அரசும் யஷ்ஷை பிடிக்க தேடுதல் வேட்டை நடத்துகிறது.

இந்திய அரசே தேடும் யஷ்? என்ன செய்தார்.? இறுதியில் என்ன ஆனது.? என்பதே மீதிக்கதை.

யப்ப்ப்பப்பா…. யஷ்… ஒன் மேன் ஷோ நடத்தியிருக்கிறார். கன்னட சினிமாவில் இந்திய சினிமாவையே மிரட்டும் ஹீரோயிசம் உள்ள படமாக இது அமைந்துள்ளது.

பிரதமர் ரவீணா அலுவலகத்தில் தன் மீதே புகார் கொடுக்கும் காட்சி.. துபாய் தலைவனை சந்திக்கும் காட்சி.. எதிரிகளை வீழ்த்தும் காட்சி என மாஸ் காட்சிகளை வைத்து வெறி ஏத்தியிருக்கிறார் டைரக்டர்.

நாயகியாக ஸ்ரீநிதி ஷெட்டி. தன்னை காதலிக்காத பெண்ணை வலுக்கட்டாயமாக தூக்கி வருகிறார் யஷ். சில நாட்களில் ‘ஐ லவ் யூ’ சொல்லிவிடுகிறார் நாயகி. இது எப்படி.? கொஞ்ச நேரமே வந்தாலும் காட்சிகளில் ஸ்ரீநிதிக்கு முக்கியத்துவம் உண்டு.

நாயகனுக்கு இணையாக மிரட்டிய இருவர் சஞ்சய் தத் & ரவீனா டாண்டன். அகிரா என மிரட்டல் வில்லனாக சஞ்சய் தத். உடல்மொழியும் மிரட்டல் மொழியும் கூடுதல் ப்ளஸ்.

பிரதம மந்திரியாக ரவீனா டாண்டன். இவரின் நடிப்பும் பாராட்டும் வகையில் உள்ளது.

இவர்களுடன் அச்யுத் குமார், ஈஸ்வரி ராவ், ‘வடசென்னை’ சரண் ஆகியோரும் கச்சிதம். கதை சொல்லும் பிரகாஷ் ராஜ் & மாளவிகாவும் உள்ளனர்.

அன்பறிவின் சண்டை வேற லெவல். பிரம்மாண்டத்திற்கு ஏற்ற மிரட்டலான ஃபைட் மேக்கிங்.

அனைத்து துறைகளிலும் ஒளிப்பதிவு, இசை, பின்னணி இசை, படத்தொகுப்பு, கலை இயக்கம், ஆடை வடிவமைப்பு என உலகத் தரத்தில் ஒரு கன்னட சினிமா என கண்களுக்கு விருந்து வைத்துள்ளார்.

ஆனால் சிறுவர்களுக்கு சொல்லும் உதாரணங்களாக தத்துவம் பேசிக் கொண்டே இருப்பதும் சலிப்பை தருகிறது. ஒருவேளை சிறுவர் சிறுமிகளை கவர காட்சி வைத்திருப்பாரோ.?

அரசியல் அதிகாரத்தால் கிரிமினல்களை ஒடுக்கமுடியாமல் போவது ஏன் என்ற அரசியலையும் அப்பட்டமாக அம்பலப்படுத்தியிருக்கிறார்.

முதல் பாதியில் மெதுவாக நகரும் கதை இடைவேளையில் தொடங்கி க்ளைமாக்ஸ் வரை அரங்கை நிஜமாகவே தீப்பிடிக்க வைத்துள்ளது. கத்திக்குத்து, துப்பாக்கிச்சூடு என ரத்தமும் தெறிக்கிறது.

படம் முடியும் போது என்ட் கார்ட்டில் ‘கேஜிஎப் 3’க்கு ஒரு ட்விஸ்ட் வைத்து அடுத்த ட்ரீட்டுக்கும் அழைக்கிறார் பிரசாந்த் நீல்.

கேஜிஃஎப் 2 – ராக்கியின் ஒன் மே ஷோ

Leave A Reply

Your email address will not be published.