ஐபிஎல் தொடரில் மோசமான சாதனை படைத்த மும்பை இந்தியன்ஸ் அணி.

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் இந்த சீசனில் இதுவரை ஒரு வெற்றிகூட பெறவில்லை தான் மோதிய 7 ஆட்டத்திலும் தோல்வியை சந்தித்துள்ளது. இதன் மூலம் இந்த சீசனில் மும்பை அணி வெளியேறுவது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது.

இந்த நிலையில் ஒரு சீசனில் தொடர்ச்சியாக முதல் 7 போட்டியில் தோல்விகளை சந்தித்த முதல் அணி என்ற மோசமான சாதனையை மும்பை பெற்றது. இதற்கு முன்பு 2013-ம் ஆண்டு டெல்லியும், 2019-ம் ஆண்டு பெங்களூரு அணியும் தங்களது முதல் 6 ஆட்டங்களில் தொடர்ச்சியாக தோற்று இருந்தன.

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ஒரு அணி தொடர்ச்சியாக 7 தோல்விகளை சந்திப்பது 11-வது முறையாக நிகழ்ந்துள்ளது. ஆனால் சாம்பியன் பட்டம் பெற்ற அணி தொடர்ந்த 7 தோல்வியை சந்தித்தது இதுவே முதல் முறை.

Leave A Reply

Your email address will not be published.