ஐ.நா. பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ் விரைவில் ரஷியா பயணம்.

உக்ரைன் மீது ரஷியா 59-வது நாளாக போர் தொடுத்து வருகிறது. இந்த போரில் பொதுமக்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளன்ர்.

இதற்கிடையில், இந்த போரை முடிவுக்கு கொண்டு வர பல்வேறு நாடுகள்முயற்சித்தபோதும் அந்த முயற்சிகள் தோல்வியிலேயே முடிந்து வருகின்றன.

இந்நிலையில், ஐநா பொதுச்செய்லாளர் ஆன்டனியோ குட்டரெஸ் வரும் 26-ம் தேதி ரஷியா செல்ல உள்ளார். ரஷிய அதிபர் புதின் மற்றும் வெளியுறவுத்துறை மந்திரி சர்ஜி லவ்ரோவை சந்திக்க உள்ளார்.

இந்த சந்திப்பின் போது உக்ரைனில் நடைபெற்று வரும் போரை உடனடியாக நிறுத்தும்படி ரஷிய அதிபர் புதினிடம் ஐநா பொதுச்செயலாளர் வேண்டுகோள் விடுப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.