பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட 22 பேரை கைது செய்யுமாறு சட்ட மா அதிபர் உத்தரவு

கோட்டா கோ கம மற்றும் மைனா கோ கம தாக்குதல் சம்பவங்கள் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட 22 ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன செயற்பாட்டாளர்கள் மற்றும் முக்கிய ஆதரவாளர்களை கைது செய்யுமாறு பொலிஸ் மா அதிபர் போலீசாருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

இந்த தாக்குதல் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்களான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, சனத் நிஷாந்த, சஞ்சீவ எதிரிமான்ன மற்றும் மிலன் ஜயதிலக்க உட்பட 22 ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயற்பாட்டாளர்கள் மற்றும் உறுப்பினர்களை கைது செய்யுமாறு குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு பொறுப்பான பொலிஸ் மா அதிபர் மற்றும் பிரதி பொலிஸ் மா அதிபர் ஆகியோருக்கு சட்டமா அதிபர் உத்தரவிட்டுள்ளார்.

மே மாதம் 9 ஆம் திகதி கொழும்பில் அலரிமாளிகைக்கு அருகாமையிலும் காலி முகத்திடல் மைதானத்திலும் அமைதியான முறையில் போராட்டம் நடத்தியவர்கள் மீது மேற்படி நபர்கள் தாக்குதல் நடத்தியதன் பின்னணியிலேயே இக் கைது உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த நபர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு பொலிஸ்மா அதிபர் அறிவுறுத்தியுள்ளார்.

சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனும் இந்த பட்டியலில் அடங்குகிறார்.


Leave A Reply

Your email address will not be published.