மூன்று ரன்கள் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்திய ஹைதராபாத் அணி.

15வது ஐபிஎல் தொடரின் 65வது லீக் போட்டியில் கேன் வில்லியம்சன் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின.

மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 193 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ராகுல் த்ரிபாட்டி 76 ரன்களும், ப்ரியம் கர்க் 42 ரன்களும் எடுத்தனர்.

இதன்பின் 194 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்தி களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ரோஹித் சர்மா (48) மற்றும் இஷான் கிஷன் (43) ஆகியோர் நல்ல துவக்கம் கொடுத்தனர். இதன்பின் களமிறங்கிய டேனியல் சம்ஸ் (15) மற்றும் திலக் வர்மா (8) ஆகியோர் விரைவாக விக்கெட்டை இழந்து ஏமாற்றம் கொடுத்தாலும், அடுத்ததாக களத்திற்கு வந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய டிம் டேவிட் 18 பந்துகளில் 4 சிக்ஸர் மற்றும் 3 பவுண்டரிகளுடன் 46 ரன்கள் எடுத்ததன் மூலம் மும்பை அணியின் வெற்றிக்கு கடைசி இரண்டு ஓவரில் 18 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டது. நடராஜன் விசிய போட்டியின் 18வது ஓவரில் 4 சிக்ஸர்கள் விளாசிய டிம் டேவிட், அதே ஓவரின் கடைசி பந்தில் ரன் அவுட்டானார்.

மிக முக்கியமான போட்டியின் 19வது ஓவரை வீசிய புவனேஷ்வர் குமார், தனது துல்லியமான பந்துவீச்சின் மூலம் அந்த ஓவரில் ஒரு ரன் கூட கொடுக்காமல் ஒரு விக்கெட்டும் வீழ்த்தி போட்டியில் திருப்புமுனையை ஏற்படுத்தினார். கடைசி ஓவரை வீசிய ஃபாரூகி 15 ரன்கள் விட்டுகொடுத்தாலும் இரண்டு பந்துகளில் ஒரு ரன் கூட கொடுக்காததன் மூலம் ஹைதராபாத் அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றுள்ளது.

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி சார்பில் அதிகபட்சமாக உம்ரன் மாலிக் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அதே போல் வாசிங்டன் சுந்தர் மற்றும் புவனேஷ்வர் குமார் ஆகியோர் தலா 1 விக்கெட்டை கைப்பற்றினர்.

Leave A Reply

Your email address will not be published.