மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி விடுத்துள்ள கோரிக்கை!!

மே மாதம் 18ம் திகதி முதல் 22ம் திகதி வரை நாடளாவிய ரீதியில் விசேட நுளம்பு கட்டுப்பாட்டு வாரமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மட்டக்களப்பில் கடந்த நாட்களில் அதிகமான டெங்கு நோய் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இன்று புதன்கிழமை முதல் சுகாதார
துறையினர், பொலிஸார் மற்றும்
இராணுவத்தினர் இணைந்து வீட்டு கள பரிசோதனையை முன்னெடுக்கவுள்ளனர். எனவே, தினமும் சிறிது நேரம் ஒதுக்கி வீட்டின் உற்புறம் மற்றும் சுற்றுப்புறங்களில் நுளம்பு பெருக சாத்தியமான இடங்களை சுத்தம் செய்து கொள்ளுமாறு, மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி மட்டக்களப்பு மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும், அநேக வீடுகளின் வீட்டின்
உட்பகுதியில் பின் வரும் இடங்களில்
அதிகமான நுளம்பு குடம்பிகள்
அவதானிக்கப்பட்டுள்ளன.

1)குளிர்சாதனப் பெட்டியின் பிற்பக்க நீர் தேங்கும் பகுதிகள்.

2)சமயலறையின் சிங் (sink) இன் கீழ்
பகுதிகள்.

3)கூரையிலிருந்து கசிந்து வரும் மழைநீரைசேகரிக்க வைக்கும் பாத்திரங்கள்.

4)குளியலறையில் நீர் சேகரித்துவைக்க
பாவிக்கப்படும் வாளிகள்.

5)நீர் தேங்கிநிற்கும் பூச்சாடிகள்.

எனவே, மேற்குறிப்பிட்ட இடங்களில் அதிக கவனம் செலுத்தி நுளம்புகள் பெருக இடமளிக்காமல் சுத்தம் செய்துகொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றனர்.

சுத்தம் செய்ய தவறும் பட்சத்தில்
உரிமையாளருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும், என மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.