மஹிந்த கொண்டு வந்த சந்திரபாலவை துரத்திய SLBC ஊழியர்கள்!

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர் நாயகம் சந்திரபால லியனகே, சட்டவிரோதமான முறையில் 10 சம்பள உயர்வைப் பெற்ற குற்றச்சாட்டின் பேரில், அதன் ஊழியர்களால் இன்று (19) துரத்தியடித்தனர்.

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் ஒன்றிணைந்த தொழிற்சங்கக் கூட்டமைப்பு இன்று அனைத்து ஊழியர்களுக்கும் சந்திப்பு ஒன்றை நடத்தி விடயத்தை வெளிப்படுத்தியதாகவும் அதன் பின்னர் ஊழியர்கள் அலுவலகத்தை முற்றுகையிட்டு பணிப்பாளர் நாயகத்தை முற்றுகையிட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ஊடகத்துறை மற்றும் தகவல் அமைச்சின் செயலாளர் (நிர்வாகம்) சத்குமார தலையிட்டு நிலைமையைக் கட்டுப்படுத்தினார், அப்போது திரு.சந்திரபால தனது அலுவலகத்தைச் சுற்றி வளைத்த ஊழியர்களிடம் தனது சம்பள உயர்வு இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தால் வழங்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், பின்னர் அங்கிருந்த தொழிற்சங்கத் தலைவர்கள் சந்திரபால அவரது சம்பளத்தை அதிகரிக்குமாறு வழங்கிய கடிதத்தை சுட்டிக்காட்டியதன் மூலம், அவரது நிலுவைத் தொகையும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக வெளிப்படுத்தினர்.

சந்திரபாலவை குறித்த பதவிக்கு நியமிக்க திரைமறைவில் செயற்பட்டவர் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ என தொழிற்சங்க தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஸ்ரீலங்கா ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் (SLBC) சுமார் 300 ஊழியர்கள் திரு. சந்திரபாலாவின் அலுவலகத்தைச் சுற்றி வளைத்திருந்தனர், பாதுகாப்புக்காக சத்குமாரவின் காரில் சந்திரபால நிலையத்தை விட்டு வெளியேறினார்.

Leave A Reply

Your email address will not be published.