நாவாந்துறை விபத்தில் இளைஞர் ஒருவர் சாவு! மற்றொருவர் படுகாயம்.

யாழ்ப்பாணம், கொட்டடி – நாவாந்துறைப் பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்ததுடன் மற்றொருவர் படுகாயமடைந்தார்.

நேற்றிரவு 9.30 மணியளவில் இடம்பெற்ற வந்த விபத்தில் 31 வயதான நவரட்ணராஜா சங்கீத் என்பவர் உயிரிழந்தார்.

அவருடன் பயணித்தவர் படுகாயமடைந்து யாழ். போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார்.

அதிவேகமாக மோட்டார் சைக்கிளில் பயணித்தமையே விபத்துக்குக் காரணம் எனத் தெரியவரும் நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.