இலங்கைக்கு இந்தியா மேலும் 40 ஆயிரம் டன் டீசல் அனுப்பி உள்ளது.

அன்னிய செலாவணி பற்றாக்குறையால் பெட்ரோல், டீசல் வாங்க முடியாமல் இலங்கை திண்டாடுகிறது. இலங்கைக்கு உதவுவதற்காக, கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் இந்தியா மொத்தம் 4 லட்சம் டன் பெட்ரோல், டீசலை இலங்கைக்கு அனுப்பிவைத்தது.

கடந்த மாதம் 23-ந் தேதி 40 ஆயிரம் டன் பெட்ரோலை இந்தியா வழங்கியது. இந்நிலையில், மேலும் 40 ஆயிரம் டன் டீசலை இந்தியா கப்பலில் அனுப்பிவைத்தது. அந்த டீசல், நேற்று முன்தினம் மாலை இலங்கையிடம் ஒப்படைக்கப்பட்டதாக அங்குள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.