பொதுமக்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள அவசர அறிவிப்பு.

நாடு முழுவதும் கடத்தல், வழிப்பறி, கொலை, கொள்ளை, கற்பழிப்பு, துப்பாக்கிச்சூடு, என மோசமான நிலைமை ஏற்பட்டுள்ளமையினால் மக்கள் அவதானமாக இருக்க வேண்டும் என பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

பொலிஸாரால் விடப்பட்டுள்ள வேண்டுகோள்கள்….

* வீடுகளில் இருக்கும் மக்கள் கதவு, ஜன்னல்களை பூட்டிற்கு வீட்டிற்குள் அவதானமாக இருக்கவும்.

*வாகனங்கள் தொடர்பிலும் அவதானமாக இருக்கவும்.

*வெளிநபர்களை வீடுகளுக்குள் அனுமதிக்க வேண்டாம்.

* உதவி கேட்டு, மின்சார தடை தொடர்பில், அல்லது அதிகாரிகள் என கூறி வீடுகளுக்கு வரும் நபர்கள் தொடர்பில் அவதானமாக இருக்கவும்.

* நகைகள் அல்லது பெறுமதியான பொருட்களுடன் வெளியே நடமாடுவதனை தவிர்க்க வேண்டும்.

* இரவு நேரத்தில் வீடுகளின் பாதுகாப்பினை உறுதி செய்துக் கொள்ளுங்கள்.

* கையடக்க தொலைபேசியின் EMI இலக்கத்தை பதிவு செய்து வைத்துக் கொள்ளுங்கள்.

* வெளிநாட்டில் இருந்து வந்த நபர்கள் அவதானமாக இருங்கள்.

*உங்களுக்கு பெறுமதியான பரிசு வெளிநாட்டில் இருந்து வந்துள்ளதாக கூறி வரும் நபர்களை வீட்டிற்குள் அனுமதிக்க வேண்டாம்.

* பேருந்துகளில் புதிய நபர்கள் பழக்கம் ஏற்படுத்த முயற்சித்தால் அதனை தவிர்த்துக் கொள்ளுங்கள்.

* பேருந்தில் பைகள் வழங்கினால் பெற்றுக் கொள்வதனை தவிர்த்து அவதானமாக இருங்கள்.

நீங்கள் ஏமாற்றப்படலாம். ஏமாற்றுக்காரர்களினால் குறி வைக்கப்படலாம் என பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.