இந்தியன் 2 படப்பிடிப்பு கண்டிப்பாக விரைவில் தொடங்கும் என்று கமல்ஹாசன்.

இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டிருந்த நிலையில் கொரோனா தொற்று மற்றும் பணப்பிரச்சனைகளால் படம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, சமீபத்தில் விக்ரம் திரைப்பட புரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கமல்ஹாசன் இந்தியன் இரண்டாம் பாகம் குறித்து கூறுகையில், “இந்தியன்-2 படத்தின் படப்பிடிப்பு பொருளாதார சிக்கல் காரணமாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது.

படப்பிடிப்பு மீண்டும் கண்டிப்பாக நடைபெறும். ரசிகர்களை காட்டிலும் நானும் இயக்குனர் சங்கரும் மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கிறோம். ராம் சரணின் ஆர்சி 15 படத்தின் வேலைகளை இயக்குனர் சங்கர் முடித்ததும் இந்தியன்-2 படத்தின் பணிகள் தொடங்கும்.” எனக் கூறியுள்ளார். மேலும், இதனால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.