சட்டவிரோதமாக எரிபொருள் இறக்கிய பௌசர்களின் அனுமதி பத்திரம் இடைநிறுத்தம்.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் லங்கா ஐ.ஓ.சி நிறுவனங்களால், உடன் அமுலுக்கு வரும் வகையில் 3 எரிபொருள் பௌசர்களின் அனுமதிப்பத்திரம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

சட்டவிரோதமாக எரிபொருளை இறக்கியதாக சமூக ஊடகங்களில் தெரிவிக்கப்பட்ட 3 சம்பவங்கள் தொடர்பாக மேலதிக விசாரணைகள் நிலுவையில் உள்ள நிலையிலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோத செயல்களை தங்களது கவனத்துக்கு கொண்டு வந்த அனைவருக்கும் நன்றி என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.