ஊரெழுவில் தூக்கில் தொங்கிய நிலையில் குடும்பஸ்தரின் சடலம்.

யாழ்ப்பாணம், கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஊரெழுப் பகுதியில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் ஊரெழு மேற்கு கணேசா வித்தியசாலைக்கு அருகில் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது எனப் கோப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இரண்டு பிள்ளைகளின் தந்தையான 30 வயதுடைய சிவலோகேஸ்வரன் மதுரகன் என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இந்த நபர் இன்று அதிகாலை 2 மணியளவில் வீட்டு முற்றத்தில் உள்ள மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாகக் காணப்பட்டார்.

இந்தச் சம்பவத்துக்கான காரணம் இதுவரை தெரிய வராத நிலையில், சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.