வடமராட்சி வடக்கு கிராம அலுவலர்கள் எரிபொருள் வழங்கக் கோரி போராட்டம்.

யாழ்., வடமராட்சி வடக்கு – பருத்தித்துறை பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட கிராம அலுவலர்கள் தமக்கு எரிபொருள் வழங்குமாறு கோரி இன்று கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நேற்று சுகயீன விடுப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட குறித்த கிராம அலுவலர்கள், இன்று வடமராட்சி வடக்கு – பருத்தித்துறை பிரதேச செயலகத்துக்கு முன்பாகக் கவனயீர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்தனர்.

இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், “கிராம அலுவலர் அத்தியாவசிய அலுவலரா? அநாவசிய அலுவலரா?”, “கொவிட் காலத்தில் அத்தியாவசிய அலுவலர்; பொருளாதார நெருக்கடி காலத்தில்…?”, “எரிபொருள் விநியோகத்தில் கிராம அலுவலர்களைப் புறக்கணிக்காதீர்கள்” – என்று எழுத்தப்பட்ட பதாதைகள் ஏந்தியிருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.