நாடு முடக்கம்; அரசே விலகு! – அநுரகுமார வலியுறுத்து.

“நாடு இன்று முடங்கியுள்ளது. அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரமே எரிபொருள் வழங்கப்படுகின்றதாம். தம்மால் முடியாது என்பதை ஆட்சியாளர்கள் நிரூபித்துவிட்டனர். எனவே, கோட்டா – ரணில் அரசு உடனடியாகப் பதவி விலக வேண்டும்.”

இவ்வாறு ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க எம்.பி. வலியுறுத்தினார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட அநுரகுமார எம்.பி. மேலும் தெரிவித்ததாவது:-

“எரிபொருள் நெருக்கடியால் மாணவர்களுக்குப் பாடசாலை செல்ல முடியவில்லை. மக்களுக்கு ஒரு நகரில் இருந்து இன்னுமொரு நகருக்குச் செல்ல முடியவில்லை. மீனவர்கள் கடற்றொழிலுக்குச் செல்ல முடியாதுள்ளது.

நோயாளிகளை வைத்தியசாலைக்குக் கொண்டு செல்ல வாகனம் இல்லை. இதனால் நாடு மேலும் வீழ்ச்சியடையும். எனவே, இந்த அரசு வீடு செல்ல வேண்டும்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.