ஊடகவியலாளர் தரிந்து சி.ஐ.டி. விசாரணைக்கு அழைப்பு: எதிர்த்து நீர்கொழும்பில் போராட்டம்!

ஊடகவியலாளர் தரிந்து உடுவரகெதரவை பொலிஸ் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (சி.ஐ.டி.) விசாரணைக்கு அழைத்ததற்கு எதிர்ப்புத் தெரிவித்து நீர்கொழும்பில் இன்று கவனயீர்ப்புப் போராட்டம் நடைபெற்றது.

நீர்கொழும்பு – தெல்வத்தை சந்தியில் அமைந்துள்ள ‘கோட்டா கோ கம’ கிளை முன்பாக இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதில் பங்கேற்றவர்கள் அரசின் நடவடிக்கைக்குக் கடும் எதிர்ப்பைத் தெரிவித்ததோடு எதிர்ப்புக் கோஷங்களையும் எழுப்பினர்.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

அத்தோடு அரசுக்கு எதிராகப் பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட சுலோக அட்டைகளையும் அவர்கள் ஏந்தியிருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.