தாக்குதல்களுக்கு பயந்து, பா.ஊக்களது பாதுகாப்புக்காக தனிப்பட்ட தகவல்கள் பாராளுமன்ற இணையதளத்தில் இருந்து நீக்கம்!

இலங்கை பாராளுமன்றத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் இருந்து அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களின் வதிவிட தகவல்களும் நீக்கப்பட்டுள்ளன.

நாட்டில் தற்போது நிலவும் சூழ்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர்களை பாதுகாக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதன்படி தற்போது பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் முகவரிகள் மற்றும் தொலைபேசி விபரங்கள் இணையத்தளத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.

முன்னதாக, நாடாளுமன்றத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தரைவழி தொலைபேசி எண்கள் மற்றும் மொபைல் போன் எண்கள் மற்றும் தற்போதைய நாடாளுமன்றத்தில் உள்ள 225 உறுப்பினர்களின் முகவரிகள் இடம்பெற்றிருந்தன.

கடந்த மே மாதம் 09 ஆம் திகதி இடம்பெற்ற அமைதியின்மையின் போது பல பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பல அரசியல்வாதிகளின் சொத்துக்கள் தாக்கப்பட்டு தீக்கிரையாக்கப்பட்டன. அதன் தாக்கமாக , எதிர்காலத்திலும் அப்படியான தாக்குதல் இடம்பெறலாம் எனும் அச்சத்தில் , அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களது தனிப்பட்ட விபரங்கள் இலங்கை பாராளுமன்றத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.