இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி- இந்தியா 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி.

இந்திய அணியின் கேப்டன் கவூர் 44 ரன்கள் அடித்தார். இலங்கை அணி தரப்பில் இனோகா ரணவீரா 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இந்தியா-இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி நடந்தது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங் தேர்வு செய்தது.

அதன்படி களமிறங்கிய இலங்கை அணி 48.2 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 171 ரன்கள் எடுத்தது. அதிகப்பட்சமாக நிலாக்ஷி டி சில்வா 43 ரன்கள் எடுத்தார். இந்திய அணி தரப்பில் தீப்தி சர்மா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதனையடுத்து 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய மகளிர் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ஷவாலி வர்மா-மந்தனா ஜோடி ஆடினர். மந்தனா 4 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார். அடுத்து வந்த பாட்டியா 1 ரன்னில் போல்ட் ஆனார். அடுத்த வந்த கேப்டன் கவூர் – ஷவாலி வர்மாவுடன் ஜோடி சேர்ந்து ரன் குவிக்க ஆரம்பித்தனர்.
1 பவுண்டரி 2 சிக்சர் அடித்த ஷவாலி வர்மா 35 ரன்கள் எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை பறிக்கொடுத்தார். அடுத்து வந்த ஹர்லீன் தியோல்- கவூர் ஜோடி சேர்ந்து ஆடினார்.

சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கவூர் 44 ரன்னில் வெளியேற சிறிது நேரத்தில் ஹர்லீன் தியோல் 34 ரன்னில் வெளியேறினார்.
இந்திய அணி 103 ரன்கள் எடுத்து 5 விக்கெட்டுகளை பறிக்கொடுத்திருந்தது. அடுத்து வந்த ரிச்சா கோஷ் 6 ரன்னில் வெளியேறினார். 4 விக்கெட்டுகள் மட்டுமே மீதம் இருந்த நிலையில் தீப்தி வர்மா- பூஜா ஜோடி அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றது.

இந்திய அணி 38 ஓவரில் 6 விக்கெட்டுகளை இழந்து 176 ரன்கள் எடுத்தது. இதனால் 4 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. அதிகப்பட்சமாக கவூர் 44 ரன்கள் அடித்தார். இலங்கை அணி தரப்பில் இனோகா ரணவீரா 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய மகளிர் அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இரு அணிகளுக்கும் இடையேயான 2-வது ஒருநாள் போட்டி ஜூலை 4-ந் தேதி நடக்கிறது.

Leave A Reply

Your email address will not be published.