கடல் கொந்தழிப்பு : பல இடங்கள் நீரில் : காலி வீதி மூடப்பட்டது

கடல் கொந்தழிப்பு காரணமாக அலைகள் கரைக்கு வருவதால் காலி வீதி அம்பலாங்கொட மாதம்பே உஸ்முதலாவ சந்தியிலிருந்து தெஹிவளை வரையான வீதி மூடப்பட்டுள்ளது.

மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு சாரதிகளை பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

தெஹிவளை, அம்பலாங்கொட , காலி மற்றும் பல பகுதிகளில் கடல் அலைகள் கரைக்கு வருவதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

தற்போது நிலவும் பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பால் கடல் அலைகள் கரைக்கு வந்துள்ளன.

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் மேற்கு மற்றும் தென் கடல் பகுதிகளில் காற்றின் வேகம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.