கரும்புலி தினமான 6ஆம் அல்லது 7ஆம் திகதிகளில் குண்டுவெடிப்பு :பாதுகாப்புச் செயலாளரிடமிருந்து கடிதம் (வீடியோ)

எதிர்வரும் ஜூலை மாதம் 6ஆம் அல்லது 7ஆம் திகதிகளில் வடக்கு, கிழக்கு அல்லது தெற்கில் குண்டுத் தாக்குதல் நடத்தப்படலாம் என பாதுகாப்புப் படையினருக்கு எச்சரிக்கை விடுத்து பாதுகாப்புச் செயலாளர் கமல் குணரத்ன அனுப்பிய கடிதத்தை நாடாளுமன்ற உறுப்பினர் திரு.நளின் பண்டார இன்று சமர்ப்பித்தார்.

கடந்த 27ஆம் திகதி இந்தக் கடிதம் வழங்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக வடக்கில் தங்கியுள்ள வெளிநாட்டவர்கள் கொண்டாட்டங்களில் பங்கேற்க வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசியல்வாதிகளின் வீடுகள் மீது தாக்குதல் நடத்தப்படும் அபாயம் இருப்பதாக கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பில் உடனடியாக ஆராயுமாறு பிரதி சபாநாயகரிடம் திரு.கி பண்டார கோரிக்கை விடுத்துள்ளார்.

அத்துடன், இன்று (04) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க, அந்த கடிதத்தின் பிரகாரம் சர்வதேச புலனாய்வு அமைப்புகளின் தலையீட்டுடன் அந்த இரு தினங்களில் நடைபெறவுள்ள கரும்புலி கொண்டாட்டத்தை இலக்கு வைத்து குண்டுத்தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டிருந்ததாக தெரிவித்தார்.

பாதுகாப்புச் செயலாளருக்கு அனுப்பப்பட்ட ஆவணத்தின் சில பகுதிகளை வாசித்த நாடாளுமன்ற உறுப்பினர் திஸாநாயக்க, இந்தக் காலப்பகுதியில் எந்தவொரு நிகழ்விலும் பங்கேற்க வேண்டாம் என வடக்கு கிழக்கில் உள்ள சர்வதேச அமைப்புகளுடன் தொடர்புடைய அதிகாரிகள் மற்றும் பொதுமக்களை அந்த ஆவணம் எச்சரிப்பதாக தெரிவித்தார்.

அவ்வாறு தாக்குதல் நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பின், எப்படி, எங்கிருந்து தகவல் பெறப்பட்டது என்பதை வெளியிடுமாறு அவர் அரசாங்கத்திடம் கேட்டுக்கொண்டார்.

தற்போது நாடு முழுவதும் நடைபெற்று வரும் அரசுக்கு எதிரான போராட்டங்கள் மற்றும் உணர்வுகளை நசுக்கவே இவ்வாறான செய்திகள் பகிரப்படுவதாக சந்தேகம் எழுவதாக பாராளுமன்ற உறுப்பினர் திஸாநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.

அவரது கருத்துக்கள் கீழே,

Leave A Reply

Your email address will not be published.