அமெரிக்க தூதரகம் முன் போராட்டங்கள் நடத்த தடை

கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கு முன்பாக போராட்டம் ஒன்றை நடத்த முன்னணி சோசலிஷக் கட்சி ஏற்பாடு செய்திருந்தது. ஆனால் கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கு முன்பாகவோ அல்லது அருகிலோ முன்னணி சோசலிஷக் கட்சி இன்று (09) நடத்தவிருந்த போராட்டத்துக்கு மாஜிஸ்திரேட் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

முன்னணியின் பொதுச் செயலாளர் சேனதீரா குணதிலக, பிரச்சார செயலாளர் துமிந்த நாகமுவ மற்றும் பலருக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கொள்ளுப்பிட்டி தலைமை ஆய்வாளர் சுமித் குணரத்ன அவர்களது வேண்டுகோளுக்கு இணங்க கொழும்பு மாஜிஸ்திரேட் நீதிமன்றம் சம்மன் அனுப்பி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த உத்தரவை மீறும் நபர்கள் தண்டனைச் சட்டத்தின் பிரிவு 185 ன் கீழ் தண்டிக்கப்படுவார்கள் என்று நீதிமன்ற உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Comments are closed.