ராஜபக்சவினருக்கு கட்டுநாயக்காவில் தடை ; மத்தளை ஊடாக வெளியேற முயற்சி

ராஜபக்ச தரப்பினர் இப்போது தப்பிக்க கடுமையாக முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். சற்று நேரத்திற்கு முன்னர் 6 பேரை ஏற்றிக் கொண்டு , பெல் 412 ரக விமானப்படை ஹெலிகாப்டர் ஒன்று கட்டுநாயக்காவிலிருந்து மத்தளை விமான நிலையத்தை நோக்கி புறப்பட்டது.

அந்த ஆறுநபர்களில் கோட்டாபய அடங்கவில்லை.

கட்டுநாயக்க விமானப்படைத் தளத்தைப் போல் மத்தளை பாதுகாப்பு அவ்வளவு இறுக்கமானதாக இல்லை. மத்தளை விமான நிலையத்தை மக்கள் சுற்றி வளைக்கலாம்.

ராஜபக்சவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து மத்தளை விமான நிலையத்தில் பணிபுரியும் குடிவரவு அதிகாரிகள் தமது கடமைகளை விட்டு விலகியுள்ளதாக பின்னர் கிடைத்த செய்திகள் தெரிவிக்கின்றன.

இரண்டு தசாப்தங்களாக தேசிய செல்வத்தை பாரியளவில் சூறையாடி தாய்நாட்டை வங்குரோத்து செய்த ராஜபக்சக்களை தப்ப விடக்கூடாது. அவர்களைப் பிடித்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும், கொள்ளையடிக்கப்பட்ட செல்வத்தை மக்களிடமே திருப்பிக் கொடுக்க வேண்டும், அவர்கள் செய்த தவறுகளுக்கு தண்டனை வழங்க வேண்டும் எனும் முனைப்பில் மக்கள் செயல்படுவதாக தெரிகிறது.

Leave A Reply

Your email address will not be published.