பதில் ஜனாதிபதியாக ரணில் நியமனம்! – கோட்டா அறிவித்தார் என்று சபாநாயகர் தெரிவிப்பு.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வெளிநாடு சென்றுள்ள நிலையில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பதில் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார் என்று சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அறிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு ஒன்று பிற்பகல் விசேட அறிக்கை வெளியிட்டு சபாநாயகர் இதனைத் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தற்போது வெளிநாடு சென்றுள்ள நிலையில், ஜனாதிபதியின் கடமைகளை நிறைவேற்றுவதற்காக அரசமைப்பின் 37 (1) பிரகாரம் ஜனாதிபதியால், பிரதமர் ரணில் விக்கிரசிங்க பதில் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார் என்றும் சபாநாயகர் கூறியுள்ளார்.

இந்தத் தகவலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தனக்கு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார் என்றும் சபாநாயகர் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், ஜனாதிபதிக்குரிய அதிகாரத்தைப் பயன்படுத்தியே ஊரடங்கு மற்றும் அவசரகாலச் சட்டத்தை பதில் ஜனாதிபதியாக பிரதமர் அறிவித்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.