துப்பாக்கி சூடு நடத்த மறுத்த பிரிகேடியர், பதவி நீக்கம் (Video)

பிரதமர் அலுவலகம் முன் போராட்டம் நடத்தியவர்களை நோக்கி துப்பாக்கி சூடு நடத்த மறுத்த பிரிகேடியர் அனைத்து பதவிகளில் இருந்தும் நீக்கம், இடமாற்றம்! அமைதியைக் கொண்டுவரும் அதிகாரிகளை அல்ல, அடக்குமுறையைச் செயல்படுத்தும் அதிகாரிகளையே அரசுக்குத் தேவை!

கடந்த ஜுலை 13ஆம் திகதி பிரதமர் அலுவலகத்தை முற்றுகையிட்டு அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப் போவதில்லை என அறிவித்த இலங்கை இராணுவத்தின் 112ஆவது படைப் பிரிவின் தளபதி பிரிகேடியர் அனில் சோமவீர அனைத்துப் பதவிகளில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அவர் தற்போது இராணுவ தலைமையகத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்.

இதற்கான காரணம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை என இராணுவத் தகவல்கள் தெரிவிக்கின்றன. செயற்பாட்டாளர்கள் தொடர்பில் பிரிகேடியர் தெரிவித்த காணொளிகள் சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவின.

இந்த நிலையில், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் விசாரணைப் பணிப்பாளருக்கு கடிதம் அனுப்பும் இலங்கை இளம் ஊடகவியலாளர் சங்கம், குறித்த அதிகாரியின் இடமாற்றம் பாரதூரமான விடயம் என வலியுறுத்துகிறது.

எனவே அந்த அறிக்கையில் உள்ள உண்மை அல்லது பொய்மை குறித்து விசாரணை நடத்துமாறு ஆணைக்குழுவிடம் சங்கம் கோருகிறது.இதனிடையே பிரிகேடியர் சோமவீரவுக்கு அருகில் உள்ள லயன் ரெஜிமென்ட்டின் 12வது படைப்பிரிவின் கட்டளை அதிகாரி லெப்டினன் கேணல் பி.எச்.ஜி.பி குணவர்தனவும் பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.