கோட்டபாய ராஜபக்சவை நாடு கடத்த வேண்டும் – சிங்கப்பூரில் போராட்டம்.

பதவியில் இருந்து நீக்கப்பட்ட இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை நாட்டிற்குள் அனுமதிக்கும் சிங்கப்பூரின் தீர்மானத்திற்கு எதிராக நேற்று (சனிக்கிழமை) சிங்கப்பூரில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் உள்ள ஹாங் லிம் பூங்காவில் உள்ள சபாநாயகர் வளாக பகுதியில் இந்தப் போராட்டம் நடைபெற்றது.

கோட்டாபய ராஜபக்சவை இங்கு வைத்திருப்பதன் மூலம் நாம் மற்ற உலகங்களுக்கும் சர்வதேச சமூகத்திற்கும் அனுப்பும் செய்தியைப் பற்றி யாராவது இதைப் பற்றி பேச வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டடிருந்த ஒருவர் தெரிவித்துள்ளார்.

2020 பொதுத் தேர்தலில் மக்கள் குரலின் (பிவி) சார்பில் போட்டியிட்ட முன்னாள் வேட்பாளரும், அமைப்பாளருமாக 34 வயதான பிரபு ராமச்சந்திரன் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.

கோட்டாபய ராஜபக்சவை நாடு கடத்த வேண்டும் நிதித்துறையில் பணிபுரியும் பிரபு, இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை நாடு கடத்துங்கள் என்ற தலைப்பில் வெள்ளிக்கிழமை காலை பேஸ்புக்கில் போராட்டத்தை அறிவித்தார்.

ஆரம்பத்தில் மாலை 4 மணி முதல் 6 மணி வரை முன்னெடுக்கப்பட்டிருந்த குறித்த போராட்டம் குறைந்த எண்ணிக்கையிலான மக்கள் காரணமாக மாலை 4.48 மணிக்கு முன்னதாகவே முடித்துக் கொண்டார்.

சிங்கப்பூரில் வைத்து ராஜபக்ச பதவி விலகுவதற்கு முடிவு செய்தது ஏன் என்று மக்கள் குரலின் முன்னாள் வேட்பாளரான 68 வயதான லியோங் செ ஹியன்அவர் கேள்வி எழுப்பினார். அவரும் பிரபுவும் சிங்கப்பூரில் உள்ள ராஜபக்சவின் வங்கிக் கணக்குகளின் விவரங்களைப் பகிரங்கப்படுத்துமாறு கேட்டுக் கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.