அரசு பள்ளி மாணவர்களுக்கான இலவச சைக்கிள் திட்டம்- முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் தொடங்கி வைத்தார்.

நீண்ட தொலைவில் இருந்து பள்ளிகளுக்கு வரும் மாணவ- மாணவியருக்கு உதவும் விதமாக தமிழகத்தில் அரசு பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் பகுதியாக அரசின் உதவி பெறும் பள்ளிகளில் 11ம் வகுப்பு பயிலும் மாணாக்கர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கப்பட்டு வந்தன.

இந்நிலையில், கடந்த 2020ம் ஆண்டு தொடக்கத்தில் தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் கொரோனா தொற்று பரவத் தொடங்கியது. இதையடுத்து, முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டன. ஆன்லைன் வகுப்புகள் மூலம் மாணவர்கள் பாடம் பயில தொடங்கினர். கொரோனா பாதிப்பால் பள்ளிகள் மூடப்பட்டதால் இலவச சைக்கிள் வழங்கும் திட்டம் தடைபட்டது.

இந்நிலையில், மாணவர்களுக்கு மீண்டும் இலவச சைக்கிள் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் உள்ள , நுங்கம்பாக்கம், மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் இன்று தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் கீழ் 11ஆம் வகுப்பு பயின்ற 6,35,947 மாணவர்களுக்கு ரூ. 323.03 கோடி செலவில் இலவச சைக்கிள் வழங்கப்படவுள்ளது. முதற்கட்டமாக 10 மாணவர்களுக்கு இலவச சைக்கிள் முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.

Leave A Reply

Your email address will not be published.